Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய ஆனி உத்தர திருவிழா 06-07-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை

 


களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய ஆனி உத்தர திருவிழா 06-07-2021ம் திகதி செவ்வாய்க்கிழமை நாளை ஆரம்பமாகவுள்ளது.  கொவிட்19 தொற்று காரணமாக கடந்தகாலங்களைப் போன்று ஆலய திருவிழாக்கள் இவ்வருடம் கோலாகலமாக  இடம்பெறமாட்டாது.

களுவாஞ்சிகுடி காவல்நிலையம், மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக எம்பெருமானின் பூசை நிகழ்வுகள், உள்வீதி உலா திருவிழாக்கள் என்பன நடைபெறும்.

எமது கிராமத்தில் உள்ள 06 குடும்பங்களினை சேர்ந்த 19 பரிபாலனை சபை உறுப்பினர்களுள் 15 பேரும், குருமார்கள் 05 பேரும் ஆலய பூசை நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியும்,

இவர்கள் 20 பேருக்கும் பொது சுகாதார பரிசோதகரினால் PCR அல்லது Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். இவர்களைத் தவிர ஏனைய எவரும் ஆலய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அடியவர்களே! திருவிழாக் காலங்களில் ஆலயத்திற்கோ, ஆலய வளாகத்திற்கோ வருகை தருவதனை தவிர்த்துக்கொள்வதோடு. எமது களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, 

www.Kaluthavalaipillaiyar.net இலும்

மற்றும் YouTube இன் ஊடாக  

https://www.youtube.com/c/kaluthavalaipillaiyar/

இலும் அத்தோடு  உத்தியோகபூர்வ Facebook  பக்கமான இந்த முகநூல் பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கும் எம்பெருமானின் பூசை நிகழ்வுகள் மற்றும் உள்வீதியுலா  திருவிழாக்களை வீட்டிலிருந்தவாறே கண்டு தரிசித்து எம்பெருமானின் அருளாசியினை பெறுவீர்களாக!!

குறிப்பு-

மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தலை அலட்சியப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என களுவாஞ்சிகுடி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

-நன்றி

Post a Comment

0 Comments