Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பொதுமக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 


மாகாணங்களுக்கு இடையில் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுபாடுகள், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்குள் உள்நுழையும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் 14 இடங்களில், வீதித் தடைகள் மூலம் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், ஏனைய மாகாணங்களிலும், வீதித் தடை சோதனைகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில், மாகாண பயணத்தடையை மீறி, சட்டவிரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments