Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடகு கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதும் கூட்டம்!


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வவுனியா நகருக்குள் நுழையும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வவுனியா நகரில் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்கள் வங்கிகள் மதுபானநிலையங்கள் உட்பட அனைத்து வியாபார நிலையங்களும் இன்று திறந்திருந்தன.

இந்நிலையில் மக்கள் தமது பணத்தேவையை பூர்த்தி செய்ய அடைவு வைக்கும் நிலையங்களில் அதிகமாக கூடி நின்றதையும் காணமுடிந்தது. இதனால் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பல்வேறு தேவைகள் நிமித்தமும் அதிகமாக மக்கள் ஒன்றுகூடியமையால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவிலிருந்து தனியார் மற்றும் அரச பேருந்துகள் வடக்கு மாகாணரீதியாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களிற்கு பின்பாக மதுபான நிலையங்கள் திறந்திருக்கின்றமையால் அதனை கொள்வனவு செய்வதற்கு மதுபான நிலையங்களின் முன்பாக அதிக கூட்டம் கூடியுள்ளது

Post a Comment

0 Comments