முறையான இணைய வசதி இல்லாது கற்றலை தொடர முடியாத மாணவர்களுக்கு, இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இணைய வசதியுடைய மத்திய நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக சிறு குழுக்கள் இணைய கற்றலில் ஈடுபடும் வகையில் மத்திய நிலையங்களை கிராமமட்டங்களில் அமைப்பதற்கு கல்வி அமைச்சும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த மத்திய நிலையம் வாரத்தில் 05 நாட்களும் காலை 7.30 முதல் மாலை 5.30 வரை திறந்திருக்கும்.
ஈ தக்ஷலாவ ஊடாக இந்த மத்திய நிலையங்களுக்கு 10 மடிக்கணினிகள், டெப் என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையங்களைக் கண்காணிப்பதற்காக மாகாண கல்வி அமைச்சினால் வலயக் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments