Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி


இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டின் முன்னால் இன்று மாலை  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


                  (துப்பாக்கிச் சூடு நடத்தியவர்)


பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேநேரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


Gallery Gallery Gallery Gallery

மேலும்....

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!


இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் மட்டக்களப்பு வீட்டிற்கு முன்பாக சற்று நேரத்துக்கு முன்பு முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர் மீது இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் முச்சக்கர வண்டியில் வந்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியபோது பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் காயமடைந் நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments