Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலியா மருத்துவ உதவிச் சங்கத்தினால் மருத்துவ உபகரணத் தொகுதி வழங்கிவைப்பு...!!

 


அவுஸ்திரேலியா மருத்துவ உதவிச் சங்கத்தினால் மட்டக்களப்பு போதனா

 வைத்தியசாலைக்கு நான்கு மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணத் தொகுதியொன்றினை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி.கே.கலாரஞ்சினியிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணி முன்னெடுத்துவரும் நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக உள்ள மருத்துவ உபகரணங்களையே அவுஸ்திரேலியா மருத்துவ உதவிச் சங்கம் வழங்கிவைத்துள்ளது.

இச்சூழலில் குறித்த உதவியானது மிகவும் பயனுள்ளதாக அமையுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுடன், காலத்தின் தேவையறிந்து குறித்த உதவிகளை வழங்கிவைத்த அமைப்பிற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற வகையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பீ.ஜீபரா அவர்களது முயற்சியின் பலனாலேயே இவ் உபரகரணத் தொகுதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments