பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதன் படி விண்ணப்ப முடிவுத் திகதி 18 ஜூன் 2021 ஆகும்.
ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
அதற்காக விண்ணப்பத்திற்கான கைநூல் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்ட கடித உறையை மாத்திரம் பயன்படுத்த வேண்டும்
முக்கியம்- நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஒன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், கோரப்பட்டுள்ள ஆவணங்களுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிவுத் தபாலில் அனுப்புவதற்கு மேலதிகமாக அவற்றை ஸ்கேன் செய்து apply2020@ugc.ac.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.
அச்சுப் பிரதி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபாலில் மாத்திரம் அனுப்ப வேண்டும் என்பதாடு, நேரில் சமர்ப்பிக்க முடியாது என்பதையும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
0 Comments