கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணி பெண் ஒருவர் சிசுவுடன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணுக்கு நாளை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவின் வாழைச்சேனை ஆர்.டி.ஓ வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய கர்ப்பிணி பெண் கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் நாளை திங்கட்கிழமை பிரசவ சத்திர சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கர்ப்பிணி பெண் வயிற்றில் சிசுவுடன் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இன்று கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள், பயணக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் பயணித்தவர்கள் என 61 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகளும் பதினேழு பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments