Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஈராக்கில் அமெரிக்க தளத்தில் சுடப்பட்ட வான்கலங்கள்! பத்தாத் மீதும் உந்துகணை தாக்குதல்

 


ஈராக்கின் மேற்கு பகுதியிலுள்ள விமான தளத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளச் சென்ற இரண்டு ஆளில்லா வான்கலங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ஈராக் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் சி-ராம் வான் பாதுகாப்பு அமைப்பின் துணைகொண்டு ரோன்கள் எனப்படும் இந்த ஆளில்லா வான்கலங்கள் இரண்டும் சுட்டுவீத்தப்பட்டுள்ளதாக ஈராக் இராணுவம் இன்று அறிவித்துள்ளது.

ஐன் அல்-ஆசாத் விமான தளத்தின் மீது கடந்த ஒரு மாதத்திற்குப் முன்னர் இவ்வாறு ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் இன்றும் அவ்வாறான தாக்குதலுக்கு முயற்சிக்கபட்டபோது குறித்த வான்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஈராக் இராணுவம் கூறியுள்ளது.

ஈராக்கின் மேற்கு பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இந்த விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயற்சிகள் இடம்பெறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பக்தாத் விமான நிலையத்திற்கு மேலே ஒரு உந்துகணை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தலைமையிலான இராணுவ கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் முயற்சிக்கு உடனடியாக எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

எனினும் ஈரான் சார்பு ஆயுத பிரிவுகளால் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்க மையங்களுக்கு எதிராக 39 தாக்குதல்கள் நடத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments