Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடந்த 24 மணி நேரத்தில் பெரியகல்லாற்றில் மூன்று மாரடைப்பு மரணங்கள்


 (ரவிப்ரியா)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று மாரடைப்பு மரணங்கள் சம்பவித்துள்ளன. 
முதலாவது மரணம் மட்டக்களப்பில், (தங்குமிடத்தில்) 6ந் திகதி பகல் நடைபெற்றுள்ளது.

பெரியகல்லாறு பிரதான வீதியைச் சேர்ந்த மட்டக்களப்பு கச்சேரி சிற்றூழியர் ஜெபமாலை ஜெயந்தன் குரூஸ் (49) மரணித்துள்ளார். மட் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மரணம் பெரியகல்லாறு பிரதான வீதியில் உள்ள வீட்டில் நடைபெற்றுள்ளது. ;06ந் திகதி சனியன்று இரவு குறித்த வீட்டில் ஓய்வு நிலை உடற்கல்வி உவிப் பணிப்பாளர் ந.நாகராஜா (66) மரணித்துள்ளளார். இவர் மட்டு மாவட்டத்தில் சாரணியத்தை நிலை நிறுத்துவதிலும் ஓயாது இறக்கும் வரை செயற்பட்டவர். அனைவரினதும் நன்மதிப்பிற்கும் உரியவர். இவரது உடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மூன்றாவது மரணம் பெரியகல்லாறு விநாயகர் வீதியில் உள்ள வீட்டில் இடம் பெற்றுள்ளது. 7ந் திகதி காலை திருமதி சிவநாயகம் (65) கல்முனை ஆதாரா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படட போது உயிரிழந்துள்ளார். கல்முனை ஆதாரா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

கொரொனா மரணங்கள் அதிகரித்த வரும் வேளையில் இதய நோயால் ஒரே நாளில் மூன்று மரணங்கள் ஒரே கிராமத்தில் சம்பவித்தது குறித்து இக் கிராம  மக்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments