Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஓட்டமாவடியில் தேங்காய் திருடர்களை காத்திருந்து மடக்கி பிடித்த தோட்ட உரிமையாளர்கள் !

 


ஓட்டமாவடியில் தேங்காய் திருடிய இருவரை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் அமைந்துள்ள தென்னந்தோட்டத்தில் நேற்று  மூவர் சேர்ந்து தேங்காய் திருடியபோது அவர்களில் இருவர் பிடிக்கப்பட்ட நிலையில் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

தங்களது தோட்டத்தில் தேங்காய்கள் இவ்வாறு தொடர்ந்தும் திருடப்படுவதனை அவதானித்த அதன் தென்னந்தோட்ட உரிமையாளர்கள் அதனை இன்றைய தினம் கண்காணித்தபோது இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை பொதுமக்களின் உதவியுடன் மடக்கிப் பிடித்ததாக தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments