வெலிமடை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்கு உட்பட்ட பொரகஸ், ஹுலங்காபொல பகுதியில் 40 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 30 பேரும், எழுமாறாக எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொரகஸ் மற்றும் ரேந்தபொல ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
0 Comments