Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இரு ஆண்களின் சடலம் மீட்பு...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் வழைச்சேனை மற்றும் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள இரு பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்தந்த பிரதேச பொலிஸார் தெரிவித்தனர்.


ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் காட்டுப் பகுதியில் விபுலானந்தாபுரம் ஏறாவூரைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இவ்வாறு காட்டுப்பகுதியில் அதே தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முறுத்தானை கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று திங்கட்கிழமை (03) கலையில் அவரது வீட்டின் பின்பகுதியில் 100 மீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்ததந்த பொலிஸ் நிலைய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments