சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலிருந்து கொவிட் நெருக்கடிக்குப் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்ட 1033 மாணவர்களில் 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக தெரியவருகின்றது.
அவர்கள் தங்கள் குடும்பத்தினர் சகிதம் அவ்வப்பகுதி பொதுச் சுகாதார அதிகாரி காரியாலயம் மூலம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கொவிட் 19 தொடர்பான விசேட கலந்துரையாடலின் போது இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.இதற்கிணங்க அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கிணங்க சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ள போதிலும் தற்போது 18 மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருப்பதாக தெரியவருகின்றது.
இப்பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பம்பஹின்ன பொது சுகாதார அதிகாரி பிரிவில் 14 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியதாகவும் அறிவிக்கப்பட்டது.அத்துடன் பல்கலைக்கழகத்திலிருந்து நாட்டி ன் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட மாணவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 Comments