கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழப்பவர்களை இரகசியமாக அடக்கம் செய்கின்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஸ்டப்பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக திருகோணமலை பிரதேச சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தா தெரிவிக்கின்றார்.
இதுபோன்ற தகவல்கள் கிடைத்திருக்கின்ற நிலையில் அதன் உண்மைதன்மை பற்றி விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதன்படி, கிண்ணியா, பெரிய கிண்ணியா, குட்டிகரச்சி, எரிதார் நகர், பெரியாத்துமுனை, மாலிந்துரை, ரஹ்மானியா நகர், சின்ன கிண்ணியா, மாஞ்சோலை, குருஞ்சிக்கேணி, முனைச்சேனை உள்ளிட்ட பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments