Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மரக்கறிகள், பழங்களை பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!-மஹிந்தானந்த

 


விவசாயிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையம் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லும் மரகறிகள் ,மற்றும் பழங்களை பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தங்களின் விவசாய உற்பத்திகளை கொண்டு சென்றுள்ளார்கள்.

கொழும்பு மெனிங் மொத்த விற்பனை மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரகறிகள் மற்றும் பழங்கள் கொழும்பு பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மரகறி மற்றும் பழங்கள் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலக பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

Post a Comment

0 Comments