Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 25கொரோனா நோயாளர்கள் அடையாளம்; 03 பேர் உயிரிழப்பு- மக்களுக்கு அவசர எச்சரிக்கை...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார் .


ஓட்டமாவடி சுகாதார வைத்திய பிரிவைச் சேர்ந்த 15 பேரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 6 பேரும் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தலா இரண்டு பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன. இதில் இரண்டு நபர்கள் மட்டக்களப்பு சுகாதார பிரிவு பகுதியையும் ஒருவர் காத்தான்குடி சுகாதார பிரிவு பகுதியையும் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 1426 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் சம்பவித்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 171 தொற்றாளர்களும், கடந்த மாதத்தில் 165 தொற்றாளர்களும், கடந்த வருடத்தில் 200 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சுகாதார பிரிவினரால் மக்களுக்கு பல அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் நடமாடுதலை குறைக்குமாறும், பயணத்தடைகளை பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிந்து பயணங்களில் ஈடுபடுமாறும், நோய் அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறும், கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments