Advertisement

Responsive Advertisement

கேகாலையில் கொட்டித்தீர்த்தது மழை! ஒருவர் மரணம்

 


கேகாலை மாவட்டத்தில் நேற்று  பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக 60 குடுப்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் ஒருவர் பலியானதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை தொலங்கம கஸ்னாவ பிரதேசத்தில் பெய்த கடும் மழையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டதுடன் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவரின் மனைவியையும் ஏனைய 3 பேரையும் கிராம வாசிகள் மீட்டெடுத்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்தோடு வரக்காபொல நகரம் அதன் அண்டிய பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஒரு வீட்டின் பின்புறம் மண்மேடு சரிந்து வீடு சேதமடைந்துள்ளது. மற்றும் தெரணியகலை பிரதேசத்தில் 7 குடுபங்களைச் சேர்ந்த 35 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெரணியகலை, வரக்காபொல, எட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் பிரதேசங்களில் அனர்த்தம் ஏற்படுமிடத்து உடனடியாக அவர்களுக்கான உதவிகளை செய்யுமாறு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments