Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கொரோனா தொற்றால் இன்று மேலும் இருவர் உயிரிழப்பு!

 


அபிவரன்)

மட்டக்களப்பு கொரோனா வைத்தியசாலை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள் இன்று வெள்ளிக்கிழமை (7) உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் மூன்றாவது கொரோனா அலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

கொரோன சிகிச்சையளிக்கும்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 69 வயதுடைய இரு ஆண்கள் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவற்குடா பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மூன்றாவது அலை கடந்த ஏப்பிரல் 22 ம் திகதி ஆரம்பித்த நிலையில் இதுவரை 4 பேர் உயிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments