Home » » சீதுவையில் இராணுவத்தினால் தயார்படுத்தப்படும் மாபெரும் கொவிட் சிகிச்சைக்கான வைத்தியசாலை!

சீதுவையில் இராணுவத்தினால் தயார்படுத்தப்படும் மாபெரும் கொவிட் சிகிச்சைக்கான வைத்தியசாலை!


 (வா.சுதர்சன்)

கொவிட் வைரஸினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களுக்கு
சிறந்த அவசரகால வைத்திய சிகிச்சையினை இலவசமாக வழங்குவதனை
நோக்கமாக கொண்டு சீதுவவில் முதன்முதலில் அனைத்து முக்கிய
வைத்திய வசதிகளையும் கொண்ட மாபெரும் வைத்தியசாலையின்
இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதற்கான கட்டட அனுசரனையினை பிராண்டிக்ஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டது என கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்துதல் பிரிவுகள், பாமசி போன்றவற்றைக் கொண்ட அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது. இலங்கையில் கொவிட் -19 இன் 3 வது அலையின் தன்மையை கருத்திற்
கொண்டு ஏற்படக் கூடிய எந்நவொரு நிலமையை எதிர்கொள்ளும் முகமாக
இராணுவத்தின் செயற்பாட்டினால் ஆரம்ப கட்டத்தில் 1200 நோயாளிகளுக்கு
சிகிச்சையளிக்கும் வகையிலான வைத்தியசாலை விரைவில் திறந்து
வைக்கப்படவுள்ளது.

"நாட்டின் கொவிட் நிலைமை மோசமான நிலைக்கு வந்தால், நாங்கள் மரத்தடியில் தங்கிக் கொண்டு எங்கள் முகாம்களில் உள்ள அனைத்து கட்டில்களையும் தொற்றாளர்களுக்கு வழங்கி எமது மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவோம்,

ஒரு போதும் கொவிட்-19 நோயாளிகளை தரையில் கிடத்தி சிகிச்சை வழங்கும் அளவிற்கு விடமாட்டோம். அதற்கான முதற் கட்டமாக சீதுவையில் இப்புதிய கொவிட்-19 வைத்தியசாலையில் இராணுவத்தால் தயாரிக்கப்பட்ட 1200 கட்டில்கள் பொருத்தப்பட்டிருக்கும், அதன் அடுத்த கட்டமாக 5000 கட்டில்களை தயார் செய்வோம் மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு முழுவதும் 10,000 கட்டில்களாக உயர்த்துவதே எமது இலக்கு. இந்த இடத்தில், அவசர சிகிச்சைகளுக்காக தனி அறைகள் மற்றும் 1200 நோயாளிகளுக்கு வைத்திய வசதிகளைக் வகையில் வைத்தியசாலை தற்போது நிறுவப்படுகின்றது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டின் மாபெரும் கொவிட்-19 வைத்தியசாலை நிறைவு குறித்து ஜெனரல்
ஷவேந்திர சில்வா தெரிவிக்கையில் இராணுவம் ஏற்கனவே வைத்தியசாலை, இடைநிலை பராமரிப்பு மையங்களில் அதிக படுக்கைகளை வழங்கியுள்ளதோடு அவசர சிகிச்சை பிரிவுகளுக்கும் கட்டில்களை வழங்கியுள்ளது.

அரசவைத்தியசாலைகளில் உள்ள 86,000 படுக்கை கட்டில்களில் ஆரம்பத்தில்
கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தமையால் சுமார்
5000 கட்டில்களை மட்டுமே பயன்படுத்தினோம், எவ்வாறாயினும், ஆரம்ப
கட்டத்தில் சுமார் 3000-3500 கட்டில்களை இராணுவம் வழங்கியது. ஆயினும்
இது போன்ற மேம்பட்ட வைத்தியசாலைகளை நிறுவுவது ஊடாக
நெரிசலையும் புதிய தொற்றளர்களையும் குறைக்கும். நாங்கள் கட்டில்களுக்கு ஒருபோதும் குறை வைப்பதில்லை என ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் நம்பிக்ைக தெரிவித்தார்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |