Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- வர்த்தக நிலையங்களை 6 மணியுடன் மூடுமாறும் மாவட்டங்களுக்கு இடையில் பயண தடை விதிக்குமாறும் வேண்டுகோள்!!

 


அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மாவட்டங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் பாதுகாப்பு பிரிவினரை அறிவுறுத்தியுள்ளார்.


ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மாலை 6 மணியுடன் மூடவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments