Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்று அச்சம்- கல்வி அமைச்சின் ஆறு பிரிவுகள் மூடப்பட்டது...!!

 


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை விவகார பிரிவு உட்பட ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது தொடர்பாளர்கள் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரிவுகள் மூடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கொரோனா ஆபத்து காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பல ஊழியர்கள் கல்வி அமைச்சில் கடமை புரியவதால் அமைச்சின் பல நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கோவிட் நெருக்கடியின் மத்தியில் அமைச்சின் நடவடிக்கைகளை முடிந்தவரை மேற்கொள்ள கல்வி அமைச்சரின் அறிவுறுத்தல்கள் குறித்து அமைச்சகம் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

Post a Comment

0 Comments