Advertisement

Responsive Advertisement

காற்றில் கலந்து 6 அடிக்கு அப்பால் இருப்பவரையும் தாக்கும் கொரோனா- ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது!!

 


அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது அதில் சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியமாகும்.


இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் 6 அடிக்கு அப்பால் இருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்டு, காற்றில் கலந்து மூச்சுக்காற்றில் உட்புக வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) புதிதாக வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுள்ளோரிடம் இருந்து வெளிப்படும் வைரஸ், காற்றில் கலந்து 6 அடிக்கு அப்பால் உள்ள ஒருவருக்கும் தொற்று வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

காற்றோட்டம் குறைந்த, கூட்டம் அதிகமுள்ள உள்ளரங்கத்தில் தொற்றுள்ளோரின் சளியில் இருந்து வெளிப்படும் வைரஸ் அங்குள்ள பிறருக்குத் தொற்றும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மூச்சுக்காற்றிலிருந்து வெளிப்படும் மிகச் சிறிய நீர்த்துளிகள் மூன்று முதல் ஆறடி தூரத்தில் இருந்தாலும் மிக எளிமையாக தொற்றக்கூடிய ஆற்றல் இருப்பதாக CDC தெரிவித்துள்ளது.

சமூக இடைவெளி, நன்கு பொருந்தக்கூடிய முகக்கவச பயன்பாடு, போதுமான காற்றோட்டம் மற்றும் நெரிசலான உட்புற இடங்களைத் தவிர்ப்பது போன்ற தற்போதைய பரிந்துரைகள் வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகின்றன என்று CDC கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments