தற்போதைய சூழ்நிலையில், நிறுவன ரீதியிலான அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2021ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைகளுக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments