Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்வி செயல்பாடுகளில் வருகிறது மாற்றம்! கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்


 எதிர்வரும் காலங்களில் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புக்களுக்கு இதுவரை நடைமுறையிலிருந்த இரண்டுவருட கால எல்லையை ஒன்றரை வருடங்களுக்குள் மட்டுப்படுத்தவதற்கு ஏற்ற வகையில் பாடவிதானங்களை தயாரிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

டிசம்பர் மாதம் நடைபெறும் கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் மாத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேற்றினை நவம்பர், டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் வெளியிடப்படும். அந்த பெறுபேறுகளின் பிரகாரம் க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஜனவரி மாத்திற்குள் ஆரம்பிப்பதற்கான சூழல் ஏற்படும்.

ஆறு தவணைகள் உள்ளடக்கிய இரண்டுவருட காலப்பகுதியை கொண்ட உயர்தர பாடத்திட்டத்தின் நடைறைப்படுத்தி டிசம்பர் மாதத்தில் கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் நாங்கள் திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

2023 ஆம் ஆண்டளவில் இவ்வாறான கல்வித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் கல்வி அமைச்சு தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது என்றார்.

Post a Comment

0 Comments