மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 1199 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கே.கருணாகரன் மேலும் கூறியுள்ளதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராம சேவையாளர் பிரிவுகளில் 2 கிராம சேவையாளர் பிரிவுகளை விடுவிக்குமாறு தேசிய கொவிட் செயலணிக்கு சிபாரிசு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தொற்றாளர் விபரம்
மட்டக்களப்பு - 22
வவுணதீவு- 05
காத்தான்குடி -19
களுவாஞ்சிகுடி -17
வாழைச்சேனை - 7
கோறளைப்பற்று மத்தி -05
செங்கலடி - 02
ஏறாவூர் -05
ஓட்டமாவடி - 01
வெல்லாவெளி -13
கிரான் -11
பட்டிப்பளை -05
0 Comments