Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

100 நாட்களில் 10 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை


இலங்கையில் தற்போது போன்று கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றால் 100 நாட்களில் 10 இலட்சம் தொற்றாளர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக சுகாதார பிரிவினர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கொழும்பில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று ஏற்பட்ட ஒரு நபர் இருவருக்கு அதனை பரப்பினால் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் இரட்டிப்பு மடங்கான கொரோனா தொற்றாளர்கள் உருவாகலாம்.

அதனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர் அதனை மற்றைய நபர்களுக்கு பரப்பாமல் இருப்பதும் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து அதனை பெற்றுக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பதும் அனைவரினதும் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.   

Post a Comment

0 Comments