Home » » கல்முனையில் சுகாதார வழிமுறைகளை மீறிய இரு கடைகளுக்கு பூட்டு : 4 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல்!

கல்முனையில் சுகாதார வழிமுறைகளை மீறிய இரு கடைகளுக்கு பூட்டு : 4 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்குதல்!


 (நூருள் ஹுதா உமர்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் உத்தரவின் பேரில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் தலைமையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத மற்றும் காலவதியான உணவுவகைகளை விற்பனை செய்த கடைகள் மேற்பார்வை செய்யப்பட்டது.

பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.நிஸ்தார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் என்.எம்.பைலான் ஆகியோரின் நெறிப்படுத்திலின் கீழ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத கடைகள் பூட்டும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்களுக்கு திடீர் பரிசோதனை நடவடிக்கையும் இன்று மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத ஒரு ஆடை விற்பனை நிலையமும் சிறு கடை ஒன்றும் 14 நாள் மூடப்பட்டு வழக்குதாக்கல் செய்யப்பட்டதுடன் மேலும் பழுதடைந்த உணவு வகைகளை விற்பனை செய்த 2 கடைகளுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இக் கள விஜயத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக பல்நோக்கு அபிவிருத்தி செயலனி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் கலந்து கொண்டது.





Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |