Advertisement

Responsive Advertisement

கொரோனா அச்சுறுத்தல் - நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!!

 


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய குருணாகல் மாவட்டத்திலுள்ள நிராவிய, நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவுப் பகுதி தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

குறித்த பகுதி நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்திருத்தார்.

குறித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகையினால் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரும் பொருட்டு இவ்வாறு முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Post a Comment

0 Comments