Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!!

 


உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


குளியாப்பிட்டிய - கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் ஹஷீம் மற்றும் அவரது ஆதரவாளர்களால் நடாத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments