Home » » சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!!


 சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


அத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு பட்டங்களை வழங்கும் அனுமதியை உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை எனவும் G.L.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை விட இந்த வளாகத்தில் வசதிகளும் கட்டடங்களும் அதிகம் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்காக அதனை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு 30,000 மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்களே உள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 17 ஆவது பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் தகவல் வௌியிட்டுள்ளார். கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |