Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடமாகாணத்தின் "கிராமத்துடன் கலந்துரையாடல்"

 


(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


வடமாகாணத்தின் "கிராமத்துடன் கலந்துரையாடல்" முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெடிவைத்த கல்லு கிராம சேவகர் பிரிவின் போகஸ்வெவ மஹா வித்தியாலய மைதானத்தில் 17வது நிகழ்வாக இந்நிகழ்வு மேன்மைதாங்கிய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் இன்று கடந்த சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

வெடிவைத்த கல்லு அதனை அண்டியுள்ள கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் நேரடியாக தமது பிரதேசம் எதிர்நோக்குகின்ற பல்வேறு  பிரச்சினைகளை முன்வைத்தனர்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் "கிராமத்தின் உரையாடல்" எனும் நிகழ்வை திட்டமிட்டதன் நோக்கம் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுடன் தாமும் கிராமத்திற்கு நேரடியாக சென்று மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார,  சமூக பிரச்சினைகளை அவதானித்து அவற்றை நேரடியாக உரிய மக்களிடம் கேட்டறிந்து உடனடி தீர்வை பெற்றுக்  கொள்வதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே இதன் உயரிய நோக்கமாகும். 

விவசாயத்தின் அடிப்படையிலான பலமான தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் மூலம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய மிக முக்கியமான உறுதி மொழிகளில் ஒன்றாகும். அந்தவகையில் மக்களின் பிரச்சினைகளை நேரடியாக தேடிச் சென்று உடனடியாக தீர்த்து வைக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி அவர்களின் இன்றைய வவுனியா மாவட்டத்திற்கான பயணம் அமைந்திருந்தது.

அத்துடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் மூலம் குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற மிக முக்கியமான வேலைத்திட்டங்களுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுக்கு அந்தந்த பிரதேச மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments