கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டி கலகெதரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, சித்தியடையும் மாணவர்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் பல்கலைகழக நுழைவிற்கான அனுமதியை பெறமுடியும்.
அதேநேரம், கல்வி பொதுதாரதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments