Home » » ஆரம்பக்கல்வி ஆசிரியர்களைத் தெளிவூட்டும் தரவட்டக் கூட்டம்

ஆரம்பக்கல்வி ஆசிரியர்களைத் தெளிவூட்டும் தரவட்டக் கூட்டம்


 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)


கொவிட் - 19 வைரஸ் தாக்கம் காரணமாக ஆரம்பக்கல்வி மாணவர்கள் இழந்த கல்வியை வழங்கும் மீண்டும் விசேட வேலைத்திட்டம் தொடர்பாக சாய்ந்தமருது கல்விக் கோட்ட  ஆரம்பக்கல்வி ஆசிரியர்களைத் தெளிவூட்டும் தரவட்டக் கூட்டம் இன்று  சனிக்கிழமை சாய்ந்தமருது மழ்ஹறுஸ் சம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனைக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹறூன்  அவர்கள் நெறிப்படுத்திய இக்கூட்டம் கல்முனை கல்வி வலய  ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பிரதம வளவாளராக கிழக்கு மாகாண  ஆரம்பக்கல்வி  உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பார்த்தீபன்  அவர்கள் கலந்து கொண்டு  ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார். கல்முனை வலயத்திற்கான  ஏனைய  ஆசிரிய  ஆலோசகர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |