Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நடிகர் விவேக் காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்

 


உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் விவேக் உயிரிழந்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

எக்மோ கருவி பொருத்தப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments