Advertisement

Responsive Advertisement

பால் புரைக்கேறி நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு- தாய்மாருக்கு எச்சரிக்கை!!

 


கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தின் குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.


இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து முழங்காவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments