Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு நகரில் 100 பேரிடம் திடீர் அன்டிஜன் பரிசோதனை!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதையடுத்து திடீர் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டதில் மேலும் இருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நேற்று சனிக்கிழமை(24) 100 பேரிடம் எழுந்தமானமாக திடீரென மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் இருவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு கல்லாறு கோவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரிய மாணவ பிள்ளைகளே இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments