(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
விளையாட்டு அமைச்சினால் கடந்த சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள தெஹியத்தகண்டியில் நடைபெற்ற கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிபலித்து போட்டியிட்ட RAM KARATE DO ORGANIZATION ஐ சேர்ந்த வீர வீராங்கனைகள் 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெள்ளி அடங்கலாக மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதுடன் இப்போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற வீரர்கள் தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்ற தெரிவாகியுள்ளனர்.
இவ் வீரர்களுக்கான பயிற்சியினை ராம் கராத்தே டூ அமைப்பின் பிரதம போதனாசிரியர் சிஹான் கே கேந்திரமூர்த்தி தலைமையில் பயிற்றுவிப்பாளர்களான சென்ஸி கே.ராஜேந்திர பிரசாத் ,சென்ஸி கே.சாரங்கன் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments: