Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தலவாக்கலையில் பற்றியெரிந்த ஆயுதக் களஞ்சியம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

 


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ள ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக முற்றாக எரிந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் அசம்பாவிதம் இன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபத்தோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகி உள்ளன.

தீப்பரவல் ஊழியர்களால் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக தீ கட்டுப்படுத்துவது இலகுவாக அமைந்துள்ளது.

குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இத் தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments