மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட 600 ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
ஊழல்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து, அதன் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவரது பரிந்துரைகளின் படி, ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் உட்பட 600 ஊழல் அதிகாரிகளை பிற அரசாங்க நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்தது.
இதன்படி கட்டம் கட்டமாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
0 comments: