தலைமைத்துவத்துடனான தொழில் வழிகாட்டல் பல் ஊடக துறைக்கான நான்கு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
மட்டக்களப்பு எகெட் சமாதான பிரிவின் ஏற்பாட்டில் எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் மட்டக்களப்பு மன்ரேசா நிலையத்தில் நடைபெறுகின்ற நான்கு நாள் பயிற்சி பட்டறையின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவத்துடனான தொழில் அதனுடன் இணைந்ததாக பல் ஊடக துறையினை மேம்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் சமய இளைஞர் கழகத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர், யுவதிகளுக்கான நான்கு நாள் பயிற்சி பட்டறையாக நடைபெறுகின்றது.
நான்கு நாள் நடைபெறுகின்ற பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட தொழில் நிலைய இணைப்பாளர் டி . சுரேந்திரன், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ . கருணாகரன், வி . திருஆனந்தராஜா கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு எகெட் சமாதான பிரிவின் ஏற்பாட்டில் எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில் ஆரம்பமான முதல் நாள் நிகழ்வில் மட்டக்களப்பு எகெட் சமாதான பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 comments: