ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சென்று சபை அமர்வில் கலந்து கொணடிருந்தார்.
இன்று வியாழக்கிழமை சபை அமர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச சபை அமர்வுகளில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது குறுக்கீடு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அபிவிருத்தி தொடர்பாகக் கேள்வியெழுப்பினர். இதனால் ஆளும் தரப்பிற்கும் எதிர்த் தரப்பிற்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய நிலையில், சபை நடவடிக்கைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளன.
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: