Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பல ஆயிரக் கணக்கில் குவிந்த மக்கள்! சற்றுமுன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டது எழுச்சி பேரணி

 


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி சற்றுமுன் கிளிநொச்சியில் இருந்து ஐந்தாவது நாளாக ஆரம்பமாகி உள்ளது.

நேற்று காலை மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகர் வந்தடைந்து மாங்குளம் ஊடாக முறிகண்டி வந்தடைந்து மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது.

இதையடுத்து இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம் பௌத்த அதிகார வெறிபிடித்த அரசே எம்மை நிம்மதியாக வாழ விடு , இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் எனும் விண்ணதிரும் கோசங்களோடு மக்கள் அலை வெள்ளமாய் பரந்தன் நோக்கி நகர்கின்றது.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர்.

Post a Comment

0 Comments