Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆரம்பகால சுகாதார பராமரிப்புவேலைத்திட்டம் முன்னெடுப்பு

 


(செ.துஜியந்தன்)

ஆரம்பகாலப் பலப்படுத்தல் பராமரிப்பு சுகாதார வேலைத்திட்டம் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையினால் வைத்தியப்பொறுப்பதிகாரி டொக்டர் ஜீ.சிறிவித்தியன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையினால் கல்லாறு, கோட்டைக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் ஆகிய கிராமங்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சுகாதாரப்பராமரிப்பு வேலைத்திட்டம் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று கோட்டைக்கல்லாறு கிராமத்தில் கிராம மக்களுக்கான விசேட வைத்திய பரிசோதனைகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்டவர்களின் உயரம், நிறை, இரத்த அழுத்தம், கண், சிறுநீர், இரத்தம் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments