Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் மீது தாக்குதல் - கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை..!!

 


அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆதவன் வீதியில் வீடு ஒன்றில் தனிமையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் தலையில் தாக்கிவிட்டு அவரின் தங்க நகயை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த ஆசிரியர் சம்பவதினமான திங்கட்கிழமை மாலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளர்.

இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் மனைவி திலையில் காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கீழே வீழ்ந்து கிடப்பதைக்கண்டு அவரை உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியரை தாக்கிவிட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments