83 வயதுடைய வயோதிப பெண்ணின் கைவிரலை வெட்டித் தங்க மோதிரம் ஒன்றை அபகரித்துச் சென்ற சம்பவமொன்று பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. பலாங்கொடை எல்லெபொல பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த இப்பெண்ணின் வீட்டினுள் இரவில் நுழைந்த இரண்டு சந்தேக நபர்கள் இக்கைங்கரியத்தை செய்துள்ளனர்.
பெண்ணின் மோதிரம் கழன்று வரும் வரை கைவிரலை வெட்டி பெண்ணை சித்திரவதை செய்துள்ள கொள்ளையர்கள், மோதிரம் கழன்றதுடன் கொள்ளைக்காக எடுத்து வந்த வாள், கத்தி ஆகியவற்றை கைவிட்டுச் சென்றுள்ளனர்.
0 Comments