Advertisement

Responsive Advertisement

உயர்தர மாணவர்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி!!

 


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதன்படி, கடந்த 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செயன்முறைப் பரீட்சைகளுக்கான விண்ணப்பதாரிகள், தமது அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை அனுமதிப்பத்திரத்துடன், தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, தோற்ற முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை, 1911 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கோ அல்லது பாடசாலை பரீட்சைகளுக்கான பிரிவின் தொலைபேசி இலக்கங்களான 0112 784 208 அல்லது 0112 784 537 மற்றும் 0113 188 350 அல்லது 0113 140 314 எனும் இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை எமது www.capitalnews.lk எனும் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments