மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய அனைத்து அறநெறி பாடசாலைகளும் மீள
ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அனைத்து அறநெறி பாடசாலைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments: