Advertisement

Responsive Advertisement

பொங்கல் புதுத் தென்பு தரட்டும்

 


 அகரம் செ.துஜியந்தன்

பொங்கலோ... பொங்கலென்று
பொங்கி மகிழும் மனநிலையில் நாமில்லை  
பொங்கலுக்கு புத்தாடையுமில்லையே!
பொங்குவதற்கு பச்சரிசிக்கும் வழியில்லை!
விளைந்த வயலும் வீணாய்ப்பேயிற்று
நொந்து தினம் வாடுகிறோம்
வெந்து மனம் துடிக்கிறேன்.

பொல்லாத கிருமிகள் வந்து
ஊரெல்லாம் கொல்லாமல் கொல்கிறது!
இல்லாத துன்பமெல்லாம் இதயத்தை வதைக்கிறது!
பொங்கல் திருநாளில் பூரிக்க மனமில்லை
பொங்கி மகிழ்ந்திருக்க ஒரு வழியும் காணவில்லை!
இரண்டாயிரத்து இருபதில் நாம் பட்டதுன்பம் போதாதா?
இருபத்தொன்றிலாவது ஈடேற வேண்டும் எங்கள் கடவுளே!

கொரோனாவின் கொடுமை  ஒழிய வேண்டும்
மக்கள் கொஞ்சமும் பயமின்றி வாழ வேண்டும்
உலகம் தளைத்து உயர வேண்டும்
ஒற்றுமையில் மக்கள் நலம் ஓங்க வேண்டும்
தமிழ்ப் பொங்கல் தரணியெல்லாம் பொங்க வேண்டும்

அன்பும் அறமும் வளர்ந்து சிறக்க வேண்டும்
அனைத்து மக்களும் இன்புற்று வாழவேண்டும்
தமிழ் மொழி சிறக்க வேண்டும்
தமிழ்த் தொண்டு வளர வேண்டும்
தமிழ்ப் பொங்கல் ஊரெல்லாம் மணக்க வேண்டும்

Post a Comment

0 Comments