Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை முதல் விடுவிப்பு!!

 


இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் எஹலிகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மின்னான, போபத் எல்ல, விலேகொட, அஸ்கங்குல மற்றும் யகுதாகொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பானந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 675 கொடவத்த கிராம சேவகர் பிரிவு மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மக்கொன கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேகவர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments